Thinnai Paiyirchi Pattarai

About Us

Thinnai Study Circle

திண்ணை உறுதிமொழி

இரக்கமும் கருணையும் இருகண்களாகட்டும்!
இதழ்கள் இரண்டிலும் புன்னகை மலரட்டும்!
உழைப்பும், உறுதியும் இருதோள்களாகட்டும்!
நேர்மை ஒன்றையே நெஞ்சம் தாங்கட்டும்!
இடதும் வலதும் இணைந்த கரங்களாகட்டும்!
இதயம் என்றும் அன்பால் துடிக்கட்டும்!
தடைகளைத் தாண்டி கால்கள் ஓடட்டும்!
கொட்டும் வியர்வையே மூலதனமாகட்டும்!
சாதி மதம் பேதம் ஒழிப்போம்!
பதவி பணம் தரும் கர்வம் தவிர்ப்போம்!
லட்சியம் விதைத்து வெற்றியை அடைந்து!
லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்து!
அறத்தின் வழிநின்று மனிதம் போற்று!

குறிக்கோள்

  • உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வுகள்
  • கல்வி உதவித்தொகைக்கான தேர்வுகள் 
  • மத்திய மற்றும் மாநில அரசுகள் நடத்தும் வேலை வாய்ப்பிற்கான போட்டித் தேர்வுகள் 
ஆகியவற்றிற்கு
  • விழிப்புணர்வு
  • வழிகாட்டுதல்
  • பயிற்சி
போன்றவற்றை முற்றிலும் சேவை நோக்கில் வழங்குதல்.

நோக்கம்

  • ஏழ்மையும் அறியாமையும் கனவுகளை அழித்து விட அனுமதியோம்.
  • அறத்தின் வழி நின்று மனிதம் போற்றுவோம்.
  • தற்சார்பும் சுயசிந்தனையும் உள்ள இளைஞர்களை உருவாக்குவோம். 

திண்ணை மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளையின் செயல்பாடுகள்

“ஏழ்மையும் அறியாமையும் கனவுகளை அழித்துவிட அனுமதியோம்”

எனும் உயர்ந்த இலக்குடன் தேனியில் திண்ணை மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை செயல்பட்டுவருகிறது.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் நுழைவுத்தேர்வு சார்ந்த வழிகாட்டுதல்களை வழங்குதல், உயர்கல்விக்கு உதவித்தொகை வழங்குதல் இளைஞர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கும் வழிகாட்டுதல் மற்றும் சேவை நோக்கத்துடன் பயிற்சி வழங்குதல் ஆகிய பணிகளைச் செய்துவருகிறோம். திண்ணை மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை ஓர் பதிவு பெற்ற அமைப்பாகும். (பதிவெண்: 87/4/2014)

திண்ணை பயிற்சிப் பட்டறை

மத்திய மற்றும் மாநில அரசுகள் நடத்தும் TNSPC, TNUSRB, TET, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 2013-ம் ஆண்டு முதல் இதுவரை 18 பயிற்சிப்பட்டறைகள் மூலம் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்குப் பயிற்சியளித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை உருவாக்கியுள்ளோம். இவர்கள் அனைவரும் நேர்மையான அரசு அலுவலர்களாகப் பணியாற்றி வருவதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

முற்றம்

  • பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் ஆற்றல்மிகு மாணவர்களை அடையாளங்கண்டு உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வுகள், கல்வி உதவித்தொகைக்கான தேர்வுகள், வேலைவாய்ப்பிற்கான தேர்வுகள் போன்றவற்றிற்குரிய விழிப்புணர்வு, வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியினை வழங்கும் திட்டமே „முற்றம்‟. ஓய்வு பெற்ற மற்றும் தற்போது பணியிலுள்ள பேராசிரியர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து மாணவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கிவருகின்றனர்.

சாளரம் - உயர் கல்வித்திட்டம்

  • அரசு மற்றும் அரசுநிதி உதவி பெறும் பள்ளிகளில் பயின்று ஏழ்மையின் காரணமாக உயர்கல்வி பெற இயலாத மாணவர்களுடைய கல்லூரிக் கனவினை நிறைவேற்றும் திட்டம் “சாளரம்”. „சாளரம் - உயர்கல்வித்திட்டம்‟ வாயிலாக இதுவரை 70 பட்டதாரிகளை உருவாக்கியுள்ளோம். திண்ணை பயிற்சிப்பட்டறையில் பயின்று அரசுப் பணியாற்றிவரும் இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடைய உதவியுடன் மாணவர்களுக்கான அனைத்துவிதமான கல்லூரிக் கட்டணங்களும் செலுத்தப்படுகின்றன. கால்நடை, பொறியியல், கலை மற்றும் அறிவியல், செவிலியர் பயிற்சி, பல்தொழில் நுட்பம் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் ''சாளரம் - உயர்கல்வித்திட்டம்‟ மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

முற்றம் - சாளரம் - திண்ணை

  • முற்றம் திட்டத்தின் வாயிலாக பள்ளியிலுள்ள ஆற்றல்மிகு மாணவர்களை அடையாளங்கண்டு அவர்களின் உயர் கல்விக்கு உதவி புரிந்து அத்துடன் நிற்காமல் திண்ணை பயிற்சிப்பட்டறை வாயிலாக அவர்களின் அரசுப்பணி கனவினை நிறைவேற்ற உதவுவதே திண்ணையின் ஒட்டுமொத்த செயல்திட்டமாகும்
திரு.P.ராமமூர்த்தி

திரு.P.ராமமூர்த்தி

தலைவர்
திரு. K.இராமகிருஷ்ணன்

திரு. K.இராமகிருஷ்ணன்

செயலாளர்
திரு.P.அசோகன்

திரு.P.அசோகன்

பொருளாளர்
திரு. A. மோகன்

திரு. A. மோகன்

துணைத் தலைவர்
திரு. A. மகேஷ்

திரு. A. மகேஷ்

துணைத் தலைவர்
திரு. P.அந்தோணிராஜ்

திரு. P.அந்தோணிராஜ்

முன்னாள் பொருளாளர்
திரு. N. சிவகுமார்

திரு. N. சிவகுமார்

முற்றம் வழிகாட்டுநர்
திரு. B. செந்தில்குமரன்

திரு. B. செந்தில்குமரன்

சாளரம் வழிகாட்டுநர்
திரு. T.ராமகிருஷ்ணன்

திரு. T.ராமகிருஷ்ணன்

திண்ணை பயிற்சிப் பட்டறை வழிகாட்டுநர்
திரு. G.செந்தில் குமார்

திரு. G.செந்தில் குமார்

ஒருங்கிணைப்பாளர்
திரு. A. சீனிவாசப் பெருமாள்

திரு. A. சீனிவாசப் பெருமாள்

மக்கள் தொடர்பு அலுவலர்
40
+ PROFESSIONAL INSTRUCTORS
10000
+ COMPLETED SESSIONS
1000
+ PLACED STUDENTS
X